சூடான செய்திகள் 1

தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம்

(UTV|COLOMBO)-ஒரு மில்லியன் ரூபா பெற்றுக்கொண்டமை தொடர்பில் வாக்குமூலம் அளிக்க பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றுள்ளார்.

பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றுள்ளார்.

அர்ஜூன் அலோசியஸிடமிருந்து பெற்றுக் கொண்ட காசோலையை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஊடாக தனது பெயரிற்கு மாற்றிக் கொண்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி பணத்தில் தான் அர்ஜூன் அலோசியஸ் இவ்வாறு தயாசிறிக்கு பணம் வழங்கியுள்ளாரா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

எதிர்க்கட்சித் தலைவருக்கு குண்டு துளைக்காத வாகனம்?

14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை நியமனம்-அமைச்சர் ராஜித

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3876 பேர் கைது