சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மாளிகையில் விசேட இப்தார் நிகழ்வு

(UTV|COLOMBO)-இஸ்லாமியர்களின் விசேட இப்தார் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வின் தலைமையில் நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

 

இஸ்லாம் மதத் தலைவர்களும் பெரும்பாலான இஸ்லாமியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், நாட்டின் சமாதானம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு ஆசிகூரும் நிகழ்வு இங்கு இடம்பெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இந்நிகழ்வு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் விசேட நிகழ்வாகும் எனத் தெரிவித்தார்.

 

சமாதானம் மற்றும் சகல இனங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கை மூலமாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மக்களினதும் அரசாங்கத்தினதும் நோக்கமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி , அரசாங்கம் என்ற வகையில் அதற்கான அர்ப்பணிப்பை மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

தேசிய நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இஸ்லாமிய மதத் தலைவர்கள் பாராட்டினார்கள்.

 

இதன்போது சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அல்குர்ஆனின் முதற் பிரதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

 

அமைச்சர்கள் பைசர் முஸ்தபா, ரவுப் ஹக்கீம், ரிஷாட் பதுயுதீன், அப்துல் ஹலீம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கல்முனை மாநாகர சபையில் ஊழல் – சீ.ஐ.டியால் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கம்மறியல்

வர்த்தக ஈடுபாட்டு சுட்டெண் பட்டியலில் இலங்கை 11 இடங்கள் முன்னேற்றம்

கோட்டாபயவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி