விளையாட்டு

ரிக்கி பொன்டிங் அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்

(UTV|AUSTRALIA)-அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொன்டிங் அவ்வணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லெங்கருடன் ரிக்கி ​பொன்டிங் அணிக்கு பயிற்சியளிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக அவுஸ்திரேலிய 20/20 கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ரிக்கி ​பொன்டிங் செயற்பட்டிருந்தார்.

43 வயதான பொன்டிங், இண்டியன் ப்ரீமியர் லீக் 20/20 கிரிக்கெட் தொடரில் டெல்லி டெயார்டெவில்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் ஆகிய அணிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து டெரன் லீமன் விலகினார்.

அதனைத் தொடர்ந்து ஜஸ்டின் லெங்கர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தெற்காசிய அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான நான்கு நாள் போட்டி இன்று ஆரம்பம்

இந்தியாவிற்கு பயணிக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு ‘விசா’

அஸ்வினுக்கு விடுத்த ரிக்கி பாண்டிங்