சூடான செய்திகள் 1

பாட புத்தகங்களில் கொலை செய்யப்படும் தமிழ் சொற்கள்- சண்.குகவரதன்

(UTV|COLOMBO)-நமது நாட்டின் தேசியக் கல்விக் கொள்கையாக இலவசக்கல்வி, 16 வயது வரை கட்டாயக் கல்வி, சமத்துவக் கல்வி, உயர்கல்வி என்று அமைந்துள்ளதுடன் கல்வி நிர்வாகத்திற்காக அமைச்சுகள், திணைக்களங்கள், அலுவலகங்கள் என்று பலவும் இயக்கப்படுகின்றன.

பாடங்கள் தயாரிப்பதற்காக தேசிய கல்வி நிறுவகமும், பாடநூல் ஆக்கத்திற்காக கல்வி வெளியீட்டுத் திணைக்களமும் உள்ளன.

இருந்தும் தமிழ்ப் பாடப் புத்தகங்களில் தமிழ்ச் சொற்கள் கொலை செய்யப்படுவதற்கான, தன் கண்டனத்தையும்.

மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் நேற்று நடைபெற மாகாணசபை கூட்டத்தில் காட்டமாக உரையாற்றினார் சண்.குகவரதன் அவர் மேலும் தெரிவிக்கையில்

இவ்வாறு பாடசாலைக் கல்வியைத் தரமாகப் பேணவும், வழங்கவும் பல செயற்பாடுகள் நம் நாட்டில் மேற்கொள்ளபட்டுள்ளன.

மொழி ரீதியாக சமத்துவக் கல்வி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை எவரும் கவனத்தில் கொள்ளவில்லை.

இலவசமாகப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடநூல்களில் தமிழ்ச் சொற்கள் உள்ள போதும் அவற்றைத் தவிர்த்துச் சிங்களச் சொற்கள் புகுத்தப்படுவது தொடர்கின்றமை தெரியவந்துள்ளது.

விஞ்ஞானப் பாடப்புத்தகங்களில் ‘ அகத்திக்கீரை ‘ என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகக் ‘ கத்துரு முருங்கா ‘ என்ற சொல்லும், அதே போல் ‘ சதைக்கரைப்பான் ‘ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘ அக்கப்பான ‘ என்ற சிங்களச் சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளமையை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

அவ்வாறு சித்திர பாடத்திலும் தமிழ்க் கலைச் சொற்கள் புறந்தள்ளப்பட்டுச் சிங்களக் கலைச்சொற்கள் புகுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இந்து சமயம் என்ற பாடப்பெயரை சைவசமயம் என்று மாற்றப்பட்டு இன்று அது சைவநெறி என்று மாற்றப்பட்டுள்ளது.

இந்தச் சைவநெறிப் பாடத்தில் இறந்தகால, எதிர்கால வசனங்கள் ஒன்றுக்குப் பின் ஒன்று முரண்பாடாக இருக்கின்றன.

தேசிய கல்வி நிறுவகத்தில் பாட ரீதியாகப் புலமை வாய்ந்த தரமான தமிழ் அதிகாரிகளை உள்வாங்குவதன் மூலமும். இதற்காக கல்வி அமைச்சின் ஊடாக நிதியினை ஒதுக்கி தமிழ்ப் பாடநூல்களின் தரத்தை அதிகரிக்க வேண்டும்.

தமிழ் இலக்கியத்தில் திருக்குறள், கம்பராமாயணம், ஐம்பெருங்காப்பியங்கள் மற்றும் அறநூல்கள் என்பவற்றை உரிய அதே மொழிநடையுடன் வரலாறுகளை மாற்றாமல் உள்வாங்கப்படல் வேண்டும்.

ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் அவர்களின் மொழி சார்ந்த கல்வி முக்கிய வகிபாகம் வகிக்கின்றது.

எனவே நமது பிள்ளைகளின் எதிர்கால வளம் கருதி இதனுடன் சம்பந்தப்பட்டவர்களும் அதன் நிறுவகங்களும், திணைக்களங்களும், மாகாண, மத்திய கல்வியமைச்சும் ஆக்கபூர்வ செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் எனவும் நேற்று நடைபெற்ற மேல் மாகாணசபையின் கூட்டத்தில் சண்.குகவரதன் மிகவும் காட்டமாக உரையாற்றினார்.

அத்துடன் தமிழ்ப் பாடநூல்களிலும் சரி ஏனைய தமிழ்மொழி மூல, சைவசமயம், சித்திரம், விஞ்ஞானம், போன்ற பாடநூல்களிலும் சரி பாட விதானங்களை உட்படுத்தும் பொழுது மிகவும் அவதானமாக தேசியக் கல்வி நிறுவக அதிகாரிகள் தங்களது மேற்பார்வையில் உன்னிப்பாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.

சைவசமய பாடநெறிப்புத்தகம் ஒன்றில் பெண் பூப்பெய்துவது சம்பந்தமான சடங்குகள், சம்பிரதாயங்களை உட்படுத்தி இருப்பது சமய பாடத்திற்கு ஏற்புடையதா? எமது கலாசாரச் செயற்பாடுகளை சமய பாடத்தினூடாக வெளிப்படுத்துவதன் நோக்கம் என்ன? அதனை ஏன் சைவசமய பாடநெறியில் புகுத்த வேண்டிய கரணம் என்ன என்றும், மேல்.மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் மேலும் தெரிவித்தார்.

அவரது உரையை அடுத்து இந்தக் கோரிக்கையை அங்குள்ள பலரும் மேசை மீது தட்டி, அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மேல் மாகாணக் கல்வியமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் எடுத்துக் கூறினர்.

தொடர்ந்து கல்வியமைச்சர் அவர்கள் தானும் தனது செயலாளரும் இது சம்பந்தமான அறிக்கை ஒன்றைத் தயாரித்து சண்.குகவரதன் அவர்களது கோரிக்கைகளையும் இணைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

இது சம்பந்தமாக சண்.குகவரதன் தலைமையில் ஆசிரியர்கள், புத்திஜீவிகள், ஓய்வுபெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளடங்கிய பத்துப்பேர் கொண்ட குழு ஒன்றையும் நியமிக்குமாறும், அதற்கு அமைச்சரவர்கள் முழு ஒத்துழைப்பைத் தருவதாகவும் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

 களுத்துறை மாணவி விற்கப்பட்டாரா? இல்லையா?

வடக்கிற்கு கொண்டு செல்லப்படுமா சம்பந்தனின் உடல்

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரை படுகொலை செய்துள்ளதாக நீதிமன்றம் அறிவிப்பு