சூடான செய்திகள் 1

தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும்

(UTV|COLOMBO)-தமது பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்திருந்தது.

இன்று நள்ளரரவு 12.00 மணிக்கு போராட்டம் நிறைவடைந்தாலும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின் தலைவர் எச்.கே. காரியவசம் கூறினார்.

வேலை நிறுத்தம் நடத்தப்பட்ட போதிலும் தபால் நடவடிக்கைகளுக்கு எவ்வித அழுத்தங்களும் ஏற்படவில்லை என்று தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன கூறினார்.

எவ்வாறாயினும் சிறிய அளவிளான பிரச்சினைகள் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

க.பொ.த உயர்தர பரீட்சையின் மீள் பரீசிலனை பெறுபேறுகள் வெளியாகின

நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஜபீர் விசாரணைகளின் பின்னர் விடுதலை…

விஜயதாச ராஜபக்ஷ கோட்டாபயவுக்கு ஆதரவு