வகைப்படுத்தப்படாத

20 ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரியா அதிகாரி

(UTV|NORTH KOREA)-அமெரிக்காவும், வட கொரியாவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் அடிக்கடி மிரட்டி வந்தார்.

இந்த நிலையில் சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம்ஜாங் உன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன் வந்தார்.

வருகிற 12-ந் திகதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம்ஜாங் உன்னும் சந்தித்து பேச உள்ளனர்.

இது சம்பந்தமான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசுவதற்காக வடகொரிய அதிபரின் உதவியாளர் கிம்யாங் சோல் அமெரிக்கா சென்றுள்ளார்.

அவர் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பேயை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி விருந்து அளித்தார்.

அமெரிக்கா- வட கொரியா மோதல் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக வடகொரிய அதிகாரி யாரும் அமெரிக்கா சென்றதில்லை. 20 ஆண்டுகளுக்கு பிறகு கிம்யாங் சோல் அமெரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அமெரிக்கா வடகொரியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது

கடல் பாதுகாப்பு தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை

யுத்தம் குறித்த ஓர் கண்ணோட்டம்