சூடான செய்திகள் 1

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஷின் முக்கிய சகா கைது

(UTV|COLOMBO)-பிரபல பாதாள உலக குழுவின் தலைவரான மாகந்துரே மதுஷின் முக்கிய உதவியாளர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி – லபுதுவ பிரதேசத்தில் வைத்து 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று இரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட ஹபுகல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய வக்வெல்லகமகே பிரதீப் தரங்க என்பவர் மாகந்துரே மதுஷின் முக்கிய உதவியாளராக அறியப்படுகிறார்.

கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும் 23 மற்றும் 33 வயதுடைய நியாகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

Related posts

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

குருநாகல் மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் விசாரிக்க 06 பேர் அடங்கிய குழு

அமைச்சர் றிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள்