சூடான செய்திகள் 1

720 கிலோ கிராம் கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது…

(UTV|COLOMBO) வடமத்திய கடற்படையினர் மற்றும் மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து வங்காலை பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக 720 கிலோ கிராம் தொகை கடல் அட்டைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பிரதி கடல்வள பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

 

 

Related posts

இலங்கையில் சுமார் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுகின்றனர்- உலக வங்கி

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்துத் தருமாறு கொழும்பு மாநகர சபை கோரிக்கை

இடியுடன் கூடிய மழை