சூடான செய்திகள் 1

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த ஆவணங்களை மீளப் பெற்றுக் கொள்வதற்காக தமது சங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.

இந்தப் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் யூ.ஆர். டி சில்வா கூறினார்.

கடந்த நாட்களில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததுடன், பல வீடுகளும் சேதங்களுக்கு உள்ளாகியிருந்தன.

இதனால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த ஆவணங்களை மக்கள் மீளப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உதவி வழங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

மைத்திரியுடனான பேச்சுவார்த்தை வெற்றி

துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

பல்கலைக்கழகங்களை அடுத்த வாரம் ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் ரவூப் ஹக்கீம்