சூடான செய்திகள் 1

மீனவர்கள் மூவரை காணவில்லை

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் குறிகட்டுவானில் கடற்றொழிலுக்கு சென்ற மூவர் காணாமற் போயுள்ளனர்.

மூன்று மீனவர்களும் நேற்று முன்தினம் கடற்றொழிலுக்கு சென்றதாகவும், இதுவரை கரைக்கு திரும்பவில்லை எனவும் மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் எழுவைதீவை சேர்ந்த நோனிஸ் மெல்கம், செபமாலை எலெக்ஸ் மற்றும் ஹரிஹர குமரன் ரூபன் ஆகியோரே காணாமற் போயுள்ளனர்.

நேற்று காலை, மீனவர்கள் தமது குடும்பத்தினரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு, கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நயினாதீவு கடற்படையினருக்கு அறிவிக்குமாறும் மீனவர்கள், உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

காணாமற் போன மீனவர்களை தேடும் நடவடிக்கையில், கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இலங்கை கிரிக்கட் தேர்தல் இன்று

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

நட்சத்திர ஹோட்டல்களிலும் வெடிப்புச் சம்பவம்…