விளையாட்டு

மூன்றாவது முறையாகவும் இந்தியப் பிரிமியர் லீக் வெற்றிக் கிண்ணம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வசம்

(UTV|INDIA)-இந்தியப் பிரிமியர் லீக் வெற்றிக் கிண்ணத்தை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சுவீகரித்துள்ளது. இந்த போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு மும்பை – வெங்கடே மைதானத்தில் நடைபெற்றது.

 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கேன் வில்லியம்சன் 47 ஓட்டங்களையும், யூசுப் பத்தான் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

எட்டிவிடக்கூடிய இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர் தடுமாறினார். பின், இணைந்த வாட்சன், ரெய்னா அபாரமாக விளையாடினார். சந்தீப் வீசிய 13வது ஓவரில் மிரட்டிய வாட்சன் 3 சிக்சர், இரண்டு பவுண்டரிகளை அடித்தார். பிராத்வைட் பந்தில் ரெய்னா (32) ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய வாட்சன், ஐ.பி.எல்., அரங்கில் 4வது சதத்தை பதிவு செய்தார். ராயுடு ஒரு பவுண்டரி அடிக்க, சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வாட்சன் (117), ராயுடு (17) அவுட்டாகாமல் இருந்தனர்.

சென்னை அணி மூன்றாவது முறையாக (2010, 11, 18) கிண்ணத்தை கைப்பற்றியது. இதன் மூலம், ஐ.பி.எல்., தொடரில் அதிக பட்டம் வென்ற அணிகளின் வரிசையில் மும்பையுடன் (3) முதலிடத்தை பகிர்ந்து கொண்டது.

இந்த தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாட்சன் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். இதற்கு முன், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசி இருந்தார். ஒட்டுமொத்தமாக, இந்த தொடரில் பதிவான 5வது சதம் இதுவாகும்.

இத்தொடரில் ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் அதிக ரன் (735 ரன்) எடுத்து ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பஞ்சாப் அணியின் ஆன்ட்ரூ ரை (24 விக்கெட்டுகள்) பர்ப்பிள் தொப்பியை வென்றார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

யொவுன் -புர இளைஞர் முகாம் நாளை ஆரம்பம்

பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ஓட்டங்களால் வெற்றி

குசல் மென்டிஸ் இற்கு கொவிட்