வகைப்படுத்தப்படாத

71 பேரின் உயிரை பறித்த விமான விபத்திற்கான காரணம் இதோ……

(UTV|RUSSIA)-71 பேரை பலி கொண்ட ரஷ்ய வானூர்தி விபத்து, சீரற்றக் காலநிலை காரணமாகவே ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காலநிலை சீர்கேடினால் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு மற்றும் விமானியின் கவனமின்மை என்பனவே குறித்த விபத்துக்கான காரணம் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த விபத்துக்கு பின்னிலையில் எந்த விதமான, தீவிரவாத செயல்களும் இல்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் எந்தவிதமான அவசர அறிவித்தல்களையும் விடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொஸ்கோவில் இருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த ரஷ்ய பயணிகள் விமானம் ஆர்குனோவோ என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 71 பேர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அனுராதபுரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றி

CIDයෙන් පොලිසියට පැමිණිල්ලක්

පොලිස් නිළධාරීන්ට කෝටි 235 කට අධික ත්‍යාග මුදලක් පිරිනමයි