சூடான செய்திகள் 1

மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழப்பு

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம், கரவெட்டி, கரணவாய் கிழக்கில் மின்சாரம் தாக்கி தந்தையும் தனயனும் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (23) காலை இடம்பெறதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தொலைக்காட்சி இயங்காத காரணத்தால், கேபிள் டிவி இணைப்பிலில் வயரைப் பொருத்த முற்பட்ட போது, அதி உயர் அழுத்தம் மின்சாரம் தாக்கியதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

கேபிள் டிவி வயருடன் மின் விநியோக இணைப்பும் தொடர்புபட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நகரில் அலைபேசி விற்பனை நிலையத்தை நடத்தும் ஜெகனாந்தன் (வயது- 50) மற்றும் சஞ்சீவன் (வயது- 29) ஆகிய இருவருமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

SLIDA பசுமை வாரம் கண்காட்சி ஆரம்பம்

ஹிஸ்புல்லா, பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜர்

(UPDATE)-பணி புறக்கணிப்பு கைவிடப்பட்டது