சூடான செய்திகள் 1

கொழும்பு – புத்தளம் புகையிரத சேவையில் பாதிப்பு

(UTV|COLOMBO)-கொழும்பு – புத்தளம் புகையிரத மார்க்கத்தில், லுனுவில புகையிரத நிலையம் வரையில் மாத்திரமே ரயில் சேவை இடம்பெறுவதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

நாத்தாண்டிய – தும்மோதர புகையிரத நிலையங்களுக்கு இடையிலான புகையிரத வீதியில் ​ஹெமில்டன் நீரோடை பெருக்கெடுத்து அந்தப் புகையிரத வீதி நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக இந்த ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், லுனுவில – கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான அலுவலக புகையிரதங்கள் வழமையான நேரங்களுக்கு அமைவாக சேவையில் ஈடுபடுவதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

நேற்றைய தினம் முதல் கொழும்பு – புத்தளம் புகையிரத மார்க்கத்திலான புகையிரத சேவை லுனுவில புகையிரத நிலையம் வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சோதனையிடுவதற்கு விமானப்படை மற்றும் STFஇன் ஒத்துழைப்பை கோரும் ரயில்வே பொது முகாமையாளர்

சரத் விஜேசூர்யவிற்கு அழைப்பாணை

ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது