சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை இன்று முதல் மீண்டும் அதிகரிக்கக்கூடும்

(UTV|COLOMBO)-நாட்டின் தெற்மேற்கு பகுதியிலும், வடக்கு மாகாணத்தின் சில மாவட்டங்களில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று முதல் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முற்பகல் வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காங்கேசன்துறை முதல் புத்தளம் ஊடாக பொத்துவில் வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதன்போது காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் கடல் சற்று கொந்தளிப்பாக காணப்படும் என்றும் காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அலோசியஸ்-பலிசேன பிணை கோரிக்கை மனு ஒத்திவைப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

தற்கொலைதாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய ஒருவர் கைது