விளையாட்டு

இறுதிப்போட்டிக்காக சென்னை-ஐதராபாத் அணிகள் மோதல்

(UTV|INDIA)-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த ஐதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.

நாளை (22) மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த ஐதராபாத் சன் ரைசர்சும், சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

23-ந் திகதி கொல்கத்தாவில் நடக்கும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் 3 மற்றும் 4-வது இடங்களை பெற்ற கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் சந்திக்கும்.

இதில் தோல்வி அடையும் அணி வெளியேறும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் 25-ந் திகதி மோதும்.

இறுதிப்போட்டி 27-ந் திகதி நடைபெறும். எஞ்சிய 4 ஆட்டங்களும் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

உள்நாட்டு ரசிகர்களுக்கும் அனுமதி

சதம் அடித்து சச்சின் பட்டியலில் இணைந்த கோஹ்லி…

LPL மலேசியாவிற்கு மாற்றப்படும் சாத்தியம்