வகைப்படுத்தப்படாத

வெனிசுலா அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி

(UTV|VENEZUELA)-வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தில்லுமுல்லுகள் முறைகேடுகள் நடந்ததாக கூறி முக்கிய எதிர்கட்சி தேர்தலை புறக்கணித்தது.

இதையடுத்து, நேற்று பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்ததால் 46.1 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் அதிபர் மதுரோ 58 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிபர் தேர்தலில் மீண்டும் மதுரோ வெற்றி பெற்றதையடுத்து அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்து அவரது வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கட்டாரில் வெப்பநிலை அதிகரிப்பு

வடக்கில் கடற்றொழில் துறையை மேம்படுத்த முறையான வேலைத்திட்டம்

ரஷியா தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 5 பெண்கள் பலி