சூடான செய்திகள் 1

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறையில்

(UTV|COLOMBO)-காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு நாளை 19 மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

நாளை காலை காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் முதலாவதாக முற்பகல் 9.30 மணிக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவுள்ளது. அதனை தொடந்து முற்பகல் 11.30 மணிக்கு காணாமலாக்கபபட்ட விடயங்களுடன் செயற்படும் சிவில் சமூக அமைப்புக்களையும், பிற்பகல் 12.30 மணிக்கு ஊடகத்துறையினரையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

காணாமல் போனார் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி இது தொடர்பில் தெரிவிக்கையில் 2016ஆம் ஆண்டு இலக்கம் 14இன் கீழ் அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டத்தின் கீழ் இந்த அலுவலகம் சட்டரீதியில் அமைக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதிலும் மேற்கொள்ளப்படும் விரிவான விசாரணை செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய நல்லிணக்க பொறிமுறை அலுவலமாக இது கருதப்படுகின்றது .

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மே மாதம் 1 ஆம் திகதி விடுமுறை இரத்து

தியத்தலாவ விமானப் படை முகாமில் வெடிப்புச் சம்பவம்

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் வெளியீடு