சூடான செய்திகள் 1

70 பேருக்கு இடமாற்றம்…

(UTV|COLOMBO)-வருடாந்த இடமாற்றத்தின் மூலம் மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிபதிகள் உட்பட நீதிமன்றத்தில் சேவையாற்றும் 70 பேருக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழு இடமாற்றம் வழங்கியுள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வரையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த இடமாற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் அவற்றை முன்வைப்பதற்கு சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் முறைப்பாடுகளை முன்வைக்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு

ரயில்வே ஊழியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பில்

டி.பி ஏக்கநாயக்க நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்