உள்நாடு

–  70 அரச அதிகாரிகளுக்கு பதவி நீக்கம் – உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர

(UTV | கொழும்பு) –  70 அரச அதிகாரிகளுக்கு பதவி நீக்கம் – உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர

தற்போது நாட்டில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், நிர்வாக பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சுமார் 70 அரச அதிகாரிகள் அந்த பதவிகளில் பணியாற்றுவதற்குத் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகளை உடனடியாக அந்தப் பதவிகளில் இருந்து நீக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இதுபோன்ற பல அதிகாரிகள் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், முறைகேடான அதிகாரிகள் இனங்காணப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து நிர்வாகப் பணிகளுக்காக அதிகாரிகள் (செயலாளர்கள் மற்றும் ஆணையர்கள்) நியமிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு

சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் [VIDEO]

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு