விளையாட்டு

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த சென்னை…

(UTV|INDIA) கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 23 ஆவது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், தினேஷ் கார்த்திக் தல‍ைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணிக்கிடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு  8.00 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களை குவித்தது.

109 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி சார்பில் வேட்சன் மற்றும் டூப்பிளஸ்ஸி ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாடி வந்த வேளை வேட்சன் 2.2 ஆவது ஓவரில் 17 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ரய்னாவும் 14 ஓட்டத்துடன் 4 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஆட்டமிழக்க சென்னை அணி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

 

 

 

 

Related posts

மீண்டும் ஒரு நாள் அணியில் தினேஷ் சந்திமால்

137 ஓட்டத்தால் இந்தியா அபார வெற்றி

பிரபல கிரிக்கட் வீரரின் அதிரடி துடுப்பாட்டம்