உள்நாடு

7 நாட்களுக்குப்பின் திறக்கப்பட்ட பதுளை வீதி!

(UTV | கொழும்பு) –

மண்சரிவு காரணமாக சுமார் 7 நாட்களாக தடைப்பட்டிருந்த பதுளை – பண்டாரவளை வீதி போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி இன்று திறந்து வைக்கப்பட்டதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.

கடந்த 9ஆம் திகதி பதுளை – பண்டாரவளை வீதி ஏழாம் கட்டைப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக சுமார் 7 நாட்களாக போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. வீதியில் காணப்பட்ட பாறைகள் மற்றும் மரங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அகற்றி, பள்ளங்கள் மற்றும் விரிசல்களை சரிசெய்ததன் பின்னர், தேசிய கட்டடங்கள் ஆராய்ச்சி அமைப்பின் புவியியலாளர்கள் வீதி பயணிப்பதற்கு ஏற்ற நிலையில் உள்ளதா என சோதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சம்மாந்துறை பஸ் டிப்போவை இடமாற்றுவதை கைவிட்டு தரமுயர்த்துவதில் கவனஞ் செலுத்துங்கள் – ரிஷாட்

பாடசாலைகள் மீளவும் திறக்கப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை

இந்தியாவிலிருந்து இலங்கை வந்த 163 மாணவர்கள்