(UTV|ITALY)-உலகின் முதல் 5 டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக வலம் வருபவர் கரோலினா பிளிஸ்கோவா. இவர் நேற்று நடைபெற்ற இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் 3-6, 6-3, 7-5 என்ற நேர்செட் கணக்கில் மரியா சக்காரி என்பவரிடம் தோல்வியை தழுவினார்.
மூன்றாவது செட்டில் பிளிஸ்கோவா அடித்த பந்து சரியான கோட்டிற்குள் விழுந்துள்ளது. ஆனால், கோட்டிற்கு வெளியே விழுந்ததாக கூறி நடுவர் தனது முடிவை அறிவித்ததால், பிளிஸ்கோவா தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நடுவர் மார்தாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிளிஸ்கோவா, போட்டி முடிந்தபிறகு தனது பேட் மூலம் நடுவரது நாற்காலியை தாக்கி சேதப்படுத்தினார்.
பிளிஸ்கோவாவின் சகோதரியும் டென்னிஸ் வீராங்கணையுமான கிரிஸ்டினா தனது டுவிட்டர் பக்கத்தில், நடுவர் மார்தா குறித்த கருத்துக்களை பதிவிட்டிருந்தார். அந்த டுவிட்டர் பதிவில், ‘நான் பார்த்த நடுவர்களில் மிகவும் மோசமான நடுவர் மார்தா. எனக்கும் எனது சகோதரிக்கும் இனி வரும் போட்டிகளில் மார்தா நடுவராக வரமாட்டார் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவில், ‘மார்தாவை முழுவதுமாக தடை செய்ய வேண்டும்’ என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்திருந்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]