சூடான செய்திகள் 1

அனுருத்த பொல்கம்பொல விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-கைது செய்யப்பட்ட அனுருத்த பொல்கம்பொல எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

UPDATE அரச – மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அனுருத்த பொல்கம்பொல, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு அவர் கைதுசெய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு தொடரூந்து பாதை நிர்மானப் பணிகளின்போது கிரவல் மண் விநியோகத்துக்காக 80 லட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு, அதனை மோசடி செய்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இடம்பெற்ற வழக்கில் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தநிலையில் , நீதிமன்றில் முன்னிலையாகாத குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வடக்கில் முதலீடு செய்யப்போகும் ஐக்கிய அரபு இராஜியம் : தூதுவர் – ஆளுநர் சந்திப்பு

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

“அங்கொட லொக்கா”டுபாய் காவற்துறையினரால் கைது