(UTV|COLOMBO)-தனியார் பஸ் கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
தனியார் பஸ் சங்கங்களிலிருந்து கிடைத்த விண்ணப்பங்களை பரீட்சித்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்ய தீர்மானித்ததாக பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்ஹ தெரிவித்தார்.
இதனடிப்படையில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்வார்.
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து தனியார் பஸ் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட தாக்கங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளதாக பிரதி அமைச்சர் கடந்த தினமொன்றில் குறிப்பிட்டிருந்தார்
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் எட்டப்பட வில்லை எனவும் பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்தார்
பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளது கருத்துக்களை கேட்டறிவதற்காக விசேட கலந்துரையாடலொன்று இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவில் நேற்று அதன் தலைவர் தலைமையில் இடம்பெற்றது
இது தோல்வியில் முடிவடைந்ததாக பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]