சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் தென் அரைப்பாகத்தின் கடற்பரப்புகளில் பெய்து வரும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குறிப்பாக பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் 100மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

ரணிலின் முழுமையான ஆசிர்வாதத்துடன் சஜித் களத்தில் – மங்கள

மஹிந்த இந்தியா சென்றார்