சூடான செய்திகள் 1

பல பகுதிகளில் மின்சாரத்தடை

(UTV|COLOMBO)-பியகம, பன்னிபிட்டிய இடையிலான மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொழும்பை சுற்றியுள்ள சில பகுதிகளுக்கு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.

ஶ்ரீஜயவர்தனபுர, தெஹிவளை, பன்னிபிடிய, இரத்மலானை ஆகிய பகுதிகளே இவ்வாறு மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

220KV மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக, மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சகத்தின் ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், மின்சாரத்தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் ஊடக பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

மட்டகளப்பு பல்கலைக்கழகம் பற்றிய பரிந்துரை அறிக்கை இன்று அமைச்சரவை குழுவுக்கு

2016 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

நூல் நிலையமொன்றில் தீப்பரவல்