சூடான செய்திகள் 1

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்றும் நாளையும்

(UTV|COLOMBO)-இன்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு செயலனி தெரிவித்துள்ளது.

மேல் மாகாணம் , சப்பிரகமுவ மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 700 குழுக்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுனர் ப்ரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 17,580 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 60 வீதத்தால் கு​றைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுனர் ப்ரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இருந்த போதிலும் தற்போது சில இடங்களில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அவதானம் உள்ளதாகவும் இதற்காக விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளை பரிசோதிக்க இரசாயன கூடம்

இறைச்சி மற்றும் மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்

ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் [VIDEO]