வகைப்படுத்தப்படாத

சிரியா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கிய ரஷிய ராணுவ விமானம்

(UTV|SYRIA)-சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிபர் பசார்-அல்- ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்கள் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். சிரியா ராணுவத்துக்கு ரஷியா உதவி புரிந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ரஷியா நாட்டின் போர் விமானங்கள் நடத்தும் வான்வழி தாக்குதல்களில் கிளர்ச்சியாளர்கள் உட்பட பல பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று சிரியாவின் லடாகியா மாகாணத்தில் உள்ள ரஷிய விமான தளத்தில் இருந்து ஒரு ராணுவ விமானம் இரண்டு விமானிகளுடன் புறப்பட்டது. சிரியா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த இரண்டு ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
முதலில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை ரஷியா மறுத்துள்ளது. அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது பறவைகள் ஏதும் என்ஜினில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அந்த இரு விமானிகளும் இறுதிவரை விமானத்தை சரிசெய்ய முயற்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று சரியாக தெரியாததால் ரஷியா ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விமானம், மக்கள் வசிக்கும் பகுதியில் விழாமல் கடலில் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அமைதியான முறையில் தேர்தல்கள் இடம்பெற்று வருகின்றன

அமைச்சரவை மாற்றம் இன்று?

நியூஸிலாந்து தாக்குதல்தாரி மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு!!