வகைப்படுத்தப்படாத

வட இந்தியாவில் புழுதிப்புயல் மற்றும் கனமழை – 74 பேர் பலி

(UTV|INDIA)-வட இந்திய மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புழுதிப்புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக குறைந்தது 74 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

புதன்கிழமையன்று அடித்த பலமான புழுதிப்புயலால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மரங்கள் சாய்ந்தன. மேலும், பல வீடுகள் பாதிக்கப்பட்டதோடு, கால்நடை உயிரினங்கள் பல உயிரிழந்தன.

கடுமையான மின்னல் தாக்கியதில் வீடுகள் உடைந்து, அதில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

நிவாரணப் பணிகளுக்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

හදිසි නීතිය මසකින් දර්ඝ කෙරේ

அஞ்சல் பணியாளர்களின் பிரச்சினை குறித்து ஆராய குழுவொன்று நியமனம்

Prisons Dept. not informed on executions