விளையாட்டு

67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

(UTVNEWS|COLOMBO) – இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அஸாம் 115 ஓட்டங்களையும் பக்ஹர் ஷமான் 54 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 238 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கராச்சி மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

சர்வதேச கிரிக்கட் பேரவையின் செயற்குழு கூட்டம் இன்று…

சிரமங்களுக்கு மத்தியில் சாதனையை தனதாக்கிய முல்லைத்தீவு யுவதி

இலங்கையின் வேகப்பந்தின் நிலை தொடர்பில் தென்னாபிரிக்காவை கதிகலங்க வைத்த விஷ்வ