விளையாட்டு

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி அட்டவணை இதோ…

(UTV|INDIA)-இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி தொடர் நடத்தப்படுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி தொடருக்கான அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நவம்பர் 21-ந் தேதியும், 2-வது 20 ஓவர் போட்டி மெல்போர்னில் நவம்பர் 23-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சிட்னியில் நவம்பர் 25-ந் தேதியும் நடக்கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரையும், 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் டிசம்பர் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரையும், 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 3-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையும் நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் ஜனவரி 12-ந் தேதியும், 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் ஜனவரி 15-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் ஜனவரி 18-ந் தேதியும் நடக்கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே அடிலெய்டில் டிசம்பர் 6-ந் தேதி தொடங்கும் முதலாவது டெஸ்ட் போட்டியை பகல்-இரவு ஆட்டமாக நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த விஷயத்தில் இரு வாரியங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேண்ட் கருத்து தெரிவிக்கையில், ‘அடிலெய்டில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியை பகல்-இரவு ஆட்டமாக நடத்துவது தான் எங்களது முன்னுரிமையாகும். அதற்கான பணிகளை நாங்கள் கவனித்து வருகிறோம். அடுத்த வாரத்தில் இது குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.

முன்னதாக நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா சென்று அந்த நாட்டு அணியுடன் 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்திய அணியின் போட்டி தொடர் முடிந்ததும், இலங்கை கிரிக்கெட் அணி, ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியா சென்று 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா

மூன்றாவது இருபதுக்கு- 20 போட்டி இன்று

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா