(UTV|IRAN)-அணுவாயுதம் தொடர்பான இஸ்ரேல் பிரதமரின் குற்றச்சாட்டுக்களை ஈரான் மறுத்துள்ளது.
2015 ஆம் ஆண்டு 6 நாடுகளுடன் ஈரான் மேற்கொண்ட சர்வதேச அணுவாயுத ஒப்பந்தத்தை மீறும் வகையில் ஈரான் செயற்படுவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான் வௌிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாட் சரீப், கடந்த காலங்களில் ஐ.நா சபையின் அணுவாயுத கண்காணிப்புக் குழுவினால் தெரிவிக்கப்பட்ட முன்னைய குற்றச்சாட்டுக்கள் அவை என்றும் தனது ட்விட்டர் வளைதளத்தினூடாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் மே 12 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள குறித்த சர்வதேச அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவது தொடர்பான அச்சுறுத்தலை அமெரிக்க ஜனாதிபதி வௌியிட்டிருந்தார்.
இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இடையே ஏற்பட்ட சந்திப்பின் பின்னர் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதத்க்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]