சூடான செய்திகள் 1

விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

(UTV|COLOMBO)-விசாக நோன்மதி தினத்தில் யாத்திரைகளில் ஈடுபடும் பக்தர்களின் வசதி கருத்தி விசேட ரயில் சேவை இடம் பெறுவுள்ளது.

இதற்கமைவாக நாளை பிற்பகல் 1 மணிக்கு விசேட ரயிலொன்று கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரம் வரை செல்லவுள்ளது.

விசாக நோன்மதி தினமான நாளை மறுதினம் ஞாயிற்றுகிழமை மாலை 6.40 அளவில் மற்றுமொரு ரயில் அனுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தினை நோக்கி செல்லும.

இதற்கு மேலதிகமாக விசாக நோன்மதி காட்சிகளை பார்வையிட விசேட ரயில் சேவைக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசாக நோன்மதி தினத்திலும் அதன் பின்னரான தினத்திலும் இந்த விசேட ரயில் சேவை இடம் பெறவுள்ளது.

களுத்துறை மற்றும் மருதானை, அளுத்கம மற்றும் மருதானை, அவிசாவலை மற்றும் கொழும்பு கோட்டை, ரம்புகனை மற்றும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் இந்த ரயில் சேவை இடம் பெறுவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சாதாரண தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் வெளியாகின

சிலாவத்துறை வீட்டுப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு!

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு