சூடான செய்திகள் 1

புத்த பெருமானின் சாரணாத் புனிதப் பொருட்கள் இலங்கைக்கு

(UTV|COLOMBO)-விசாக நோன்மதியை முன்னிட்டு இந்தியாவில் இருந்து புத்தபெருமானின் புனித பொருட்கள் இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

சாரணாத்தில் இருந்து கொண்டுவரப்படும் புனிதப் பொருட்கள் நாளை (28) தொடக்கம் மே மாதம் 2 ஆம் திகதி புதன்கிழமை வரை அலரி மாளிகையில் அடியார்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரணாத் புனித பொருட்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்குத் தேவையான ஒழுங்குகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சாரணாத்தில் உள்ள மூலகந்தக்குடி விகாரையில் புத்தபெருமானின் புனிதப் பொருட்கள் அடியார்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தன.

மகாபோதி சங்கத்தின் ஸ்தாபகரான அமரர் அனகாரிக தர்மபால இந்த விகாரையை புனரமைத்து, சாரணாத்தின் பெருமையை உலகறியச் செய்வதில் ஆற்றிய சேவைகள் அளப்பரியவை என இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயம் அறிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சுயமுயற்சியில் முன்னேற விவசாய பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தை நோக்கி நாம் துரிதமாக பயணிக்க வேண்டும்

அநுராதபுரம் பொது மருத்துவமனையில் கொள்ளை

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இன்று சந்திப்பு…