சூடான செய்திகள் 1

இலங்கையில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பிரித்தானிய பெண்ணுக்கு இழப்பீடு மறுப்பு

(UTV|COLOMBO)-2010 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வந்திருந்த போது பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் பிரித்தானிய பெண் ஒருவருக்கு இழப்பீடு வழங்க லண்டன் நீதிமன்றம் மறுத்துள்ளது.

பெந்தொட்ட பகுதியிலுள்ள ஆடம்பர விடுதி ஒன்றில் கணவருடன் தங்கியிருந்த போதே குறிப்பிட்ட பிரித்தானிய பெண் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று (26) லண்டன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த சம்பவத்திற்காக கோரப்பட்டிருந்த இழப்பீடு மறுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் தனது கணவருடன் தங்கியிருந்த விடுதியிலிருந்த விருந்தக பணியாளர் ஒருவரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமக்கு 20 ஆயிரம் பவுண்ஸ்கள் நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என்று அந்த பெண் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அத்துடன் நட்ட ஈட்டை தமக்கு இலங்கைக்கான சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்த நிறுவனமே வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.

இதற்கிடையில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் பெண் தாம் தாய்மை அடைந்துள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்திருந்த போதும், பாலியல் வல்லுறவிற்கு காரணமாக அவர் தாய்மை அடையவில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த பெண் அவரின் கணவரின் மூலமே தாய்மையடைந்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்ட நிலையில், பெண்ணின் நட்ட ஈட்டு கோரிக்கையை நிராகரித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சட்டத்தரணி சுகந்திகா தற்காலிகமாக நீக்கம்

புகையிரதத்துடன் மோதி இருவர் உயிரிழப்பு

இரு இலங்கையர்கள் இஸ்ரேலில் கைது!