சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு..

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் இன்று கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு அறிவிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புக்கு அமைய கட்சியின் பிரதான பதவிநிலைகளுக்கு கட்சியின் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அமைய கட்சியின் தவிசாளராக அமைச்சர் கபீர் ஹசீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்ட அரசியல் சபை இந்த தெரிவை மேற்கொண்டுள்ளது.

அத்துடன், தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதுபோல், கட்சியின் பிரதி தலைவராக சஜித் பிரேமதாஸவும், உப தலைவராக ரவி கருணநாயக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார ஹர்ச டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீப்பரவல்

கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ 4 வழக்குகளில் இருந்து விடுதலை