வகைப்படுத்தப்படாத

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம்

(UTV|AMERICA)-ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம் என அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron க்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையிலான சந்திப்பின் பின்னர் இந்த அறிவித்தல் வௌியாகியுள்ளது.

மே மாதம் 12 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள ஈரான் மற்றும் மேற்குலக நாடுகளுக்கிடையிலான 2015 சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் தௌிவான முடிவை அறிவிக்காத நிலையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படலாம் என அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட மெக்ரோன், புதிய ஒப்பந்தம் ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நிகழ்ச்சித்திட்டம் மற்றும் ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் வகித்து வரும் அங்கம் தொடர்பிலான விடயங்களை உள்ளடக்கியதாக அமையும் என குறிப்பிட்டார்.

அணுவாயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுமாயின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பிலான பேச்சுவார்த்தைக்காக ஜேர்மனி அதிபர் ஏங்கலா மேர்கல் நாளை மறுதினம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அத்துடன் ஒப்பந்தம் தொடர்பில் அமெரிக்காவின் தீர்மானங்களை பின்பற்றவுள்ளதாக ஈரான் வௌிவிவகார அமைச்சர் Javad Zarif தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

තිලාන් සමරවීරට නවසීලන්ත ක්‍රිකට් කණ්ඩායමේ නව තනතුරක්

தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை விரைவில் நீக்கப்படும்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிவர முயன்றவர் கைது