வணிகம்

அரிசியினை அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

(UDHAYAM, COLOMBO) – நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அரிசிக்கான புதிய கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி நாட்டரிசிக்கான அதிக்கூடிய கட்டுப்பாட்டு விலை 70 ரூபாவாகும்.

சம்பா அரிசியின் அதிக்கூடிய கட்டுப்பாட்டு விலை 80 ரூபாவாகும்.

நிதி அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் அரிசிவிலை தொடர்ச்சியாக அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு விலையினை விட அதிகமான விலையில் அரிசியினை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை , சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 75 ரூபாவில் இருந்து 80 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கோதுமை மாவின் விலை உயர்வு – பேக்கரி சங்கம்

பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

ஒளடத வலயம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி