சூடான செய்திகள் 1

பொதுநலவாய நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உகந்த சூழலினை நாம் வழங்கியுள்ளோம்!

(UTV|COLOMBO)’நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட அனைத்திற்கும் ஒரு வெற்றிகரமான எதிர்காலத்தை உருவாக்குவதன் மத்தியில் வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புக்கு பொதுநலவாய நாடுகளுக்குமிகுந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு நாங்கள் ஒரு உகந்த சூழலினை  வழங்கியுள்ளோம்’ என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டத்தொடருக்கு (CHOGM) இணையாக இடம்பெற்ற பொதுநலவாய நிறுவனங்கள் மற்றும் பொருளாதார கவுன்சில் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார்.

இவ் அமர்வு கடந்த 18 ஆம் திகதி லண்டன் கில்ட்ஹால் இல் நடைபெற்றது. 200க்கும் அதிகமான பொதுநலவாய
தொழில் முனைவோர் இவ் அமர்வில் பங்கேற்றினர், பங்கேற்றிய  அனைத்துதுறையினரும் நிகழ்வுகளை முழுமையாக பயன்படுத்தியுள்ளனர்.

அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் மங்கள சமரவீர ஆகியோருடன் இலங்கைத் தூதுக்குழு உறுப்பினர்கள் இவ் அமர்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை வர்த்தக திணைக்களம்; ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் இணைந்து இந்த அமர்வினை ஒழுங்கு செய்திருந்தது.

இவ் அமர்வில் அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்ககையில்: வர்த்தக மற்றும் முதலீட்டிற்கான பொதுநலவாய இணைப்பு  நிகழ்ச்சித்திட்டத்தில் முதலீட்டு விரிவாக்க மற்றும் வர்த்தக இணைப்பிற்கானவர்த்தக கலந்துரையாடல், டிஜிட்டல் இணைப்பு ஒழுங்குமுறை உட்பட பல  இதர விடயங்கள் பொதுநலவாய உறுப்பினர்களுக்கிடையே உரையாடலின் ஊடாக ஊக்குவிப்பதற்கு   பொதுநலவாயநிறுவனங்கள் மற்றும் பொருளாதார கவுன்சில்   உறுதியாக  உள்ளது.

பொதுநலவாய செயல்பாடுகளின் இலங்கையின் ஆர்வமான பங்களிப்பு எமக்கு பல அமர்வுகளில்  கலந்துகொள்வதற்கும், மறுமதிப்பீடு மற்றும் புத்துயிர் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும்சாதகமாக அமைந்ததோடு  அதன் வர்த்தக மற்றும் பொருளாதார நன்மைகளை எட்டுவதற்கு எளிதாக்கப்பட்டது.

மூன்று நாள் அமர்வுகளின் போது, சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினரின் வர்த்தகத்தினை அதிகரிப்பதற்கான ஆதரவு, புதிய தொழில்வாய்ப்புக்களை வழங்கல், மற்றும் இளைஞர்களுக்குதொழில்நுட்பம் மற்றும் திறன் அணுகல் வழங்கல் என்பன உள்ளடங்கிய ஒரு தளமாக பொதுநலவாய நாடுகள் எவ்வாறு  இருக்க முடியும் குறித்து  மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டது.

இவ் அமர்வில்இலங்கை வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோனாலி  விஜேரத்ன , ஏற்றமதி அபிவிருத்தி சபை தலைவர் இந்திரா மல்வத்தா,  இலங்கை வர்த்தகதிணைக்களத்தின்  உதவிப் பணிப்பாளர்  அலெக்ஸி குணசேகர, வர்த்தக கவுன்ஸெல்லர்- லண்டன் செனூஜா சமரவீரா ஆகியோரும் உத்தியோகப்பூர்வ பிரதிநிதிகளின் பிரதிநிதிகளாகஇருந்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை

எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக கலிங்க இந்ததிஸ்ஸ