சூடான செய்திகள் 1

லண்டன் விஜயம் செய்துள்ள ஜனாதிபதியுடன் இணைந்துகொண்டுள்ள உத்தியோகபூர்வ தூதுக்குழுவினர் தொடர்பான தகவல்கள் பொய்யானவை

(UTV|COLOMBO)-பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக விஜயம் செய்துள்ள ஜனாதிபதியுடன் இணைந்துகொண்டுள்ள உத்தியோகபூர்வ தூதுக்குழுவினர் தொடர்பாக பல்வேறு பொய்யான தகவல்கள் வெளியாகிய வண்ணம் காணப்படுகின்றன.

மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதியுடன் பயணித்த உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் ஜனாதிபதியின் பாரியார், ஜனாதிபதியின்; உத்தியோகபூர்வ மருத்துவர், அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் அவரது பாரியார், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, உரைபெயர்ப்பாளர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் இருவர் ஆகியோரே உள்ளடக்கப்பட்டனர்.

 

மேலும் உத்தியோகபூர்வ தூதுக்குழுவில் உள்ளடக்கப்படாத ஜனாதிபதி ஊடகப் பிரவின் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக செய்தியாளர்களும் அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலரும் மாத்திரமே இவ்விஜயத்தில் இணைந்து கொண்டனர்.

 

இதற்கு மேலதிகமாக பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கோ அல்லது அதனுடன் இணைந்ததாக இடம்பெற்ற ஏனைய கலந்துரையாடல்களுக்கோ ஜனாதிபதி செயலகத்தின் செலவில் எந்தவொரு நபரும் பயணிக்கவில்லை.

 

நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஆகியோர் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டதுடன் குறித்த பொருளாதார மாநாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய எந்தவொரு தரப்பினருக்கும் ஜனாதிபதி செயலகத்தினால் செலவுகள் மேற்கொள்ளப்படவில்லை.

 

எனவே நூற்றுக்கும் அதிகமான தூதுக்குழுவினர் ஜனாதிபதியின்; தூதுக்குழுவில் இணைந்துகொண்டுள்ளனர் என ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதுடன் அவற்றை முற்றாக நிராகரிக்கின்றோம்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

மேல் மாகாணத்தில் இன்று டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

இலங்கையில் மீள அமுலாகும் மரண தண்டனை நிறுத்தப்பட வேண்டும்