சூடான செய்திகள் 1

ஈரானிய சபாநாயகரை மஜ்லிஸூஸ் ஸூரா சந்தித்து பேச்சு

(UTV|COLOMBO)-உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருக்கும் ஈரானிய சபாநாயகர் எச்.ஈ.அலி லரிஜனி அவர்களை  மஜ்லிஸூஸ் ஸூரா வின் தலைவர் மௌலவி அஸ்ரப் முபாரக் தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று (20.04.2018) காலை சந்தித்து பேசினர்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து தூதுக்குழுவினரிடம் ஈரானிய சபாநாயகர் கேட்டறிந்து கொண்டார்.

அண்மைக்காலங்களில் இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து, சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் ஈரானிய சபாநாயகரிடம் விபரித்ததோடு, இலங்கை அரசாங்கத்திற்கு அரபுலக நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் இது தொடர்பிலான அழுத்தங்களை கொடுத்து எதிர்காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கு ஈரானிய அரசாங்கம் முன்நின்று முஸ்லிம் நாடுகளை வழிநடாத்த வேண்டுமென கோரிக்கைவிடுத்தனர்.

வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு அகதிகளாகி இன்றும்  மீள்குடியேறாமலிருக்கும் வடக்கு முஸ்லிம்களுக்கான மீள்குடியேற்றத்திற்கு ஈரானிய அரசாங்கம் காத்திரமான உதவிகளை நல்கவேண்டுமெனவும், கடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரானிய அரசாங்கம் இன மத பேதமின்றி உதவியளித்தது போன்று இனிவரும் காலங்களிலும் உதவவேண்டுமென தெரிவித்தனர்.

மஜ்லிஸூஸ் ஸூராவின் கருத்துக்களை செவிமடுத்த ஈரானிய சபாநாயகர் ஈரானிய அரசாங்கம் இலங்கை மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு தமது உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்குமென உறுதியளித்தார்.

 

ஏ.எம்.றிசாத்

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா முறைக்கேடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் மீளவும் நீடிப்பு

நற்பிட்டிமுனை முக்கியஸ்தர்கள் கிராம அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் ரிஷாத்துடன் பேச்சு

முஸ்லிம் உலகம் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும்