சூடான செய்திகள் 1

முஜுபுர் ரஹ்மானை பிரதி சபாநாயகராக நியமிக்க கோரி பிரதமருக்கு கடிதம்

(UTV|COLOMBO)-தேசிய அரசாங்கம் தொடர்பிலான முக்கிய தீர்மானம் ஒன்றை ஐக்கிய தேசிய கட்சி அடுத்தவாரம் மேற்கொள்விருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.

இந்தவிடயம் குறித்து அடுத்தவாரம் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடி, தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அரசியல்பீடம் நேற்று பிரதமர் தலைமையில் கூடி ஆராய்ந்திருந்தது.

இதன்போது, கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்துக்கு முன்னதாக, மீண்டும் அந்த குழு ஒன்று கூடவும், கட்சியின் முக்கிய பதவிகளில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பிலும் ஆய்வு செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மானை, பிரதி சபாநாயகராக நியமிக்க கோரி, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதமரிடம் கடிதம் ஒன்றை கையளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

தீவிரவாத ஒழிப்பு புதிய சட்டங்களை துரிதமாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

சிறுத்தை கொலை : கைதான 10 பேரும் பிணையில் விடுதலை