(UTV|COLOMBO)-தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் லக் சதொச நிறுவனம் 400 கோடி ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக வணிக, கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் திருமதி இந்திக்கா ரணதுங்க தெரிவித்தார்.
இது புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் நிறுவனம் ஈட்டிய ஆகக் கூடுதலான வருமானம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் சதொச கிளைகள் மூலம் 40 சதவீத விலைக்கழிவு வழங்கப்பட்டது.
இது வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க வழி வகுத்தது.
பண்டிகைக் காலத்தில் சதொச விற்பனை கிளைகள் முழுமையாக கூடுதலான நேரம் திறந்து வைக்கப்பட்டன.
இன்று வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து எதுவித முறைப்பாடும் கிடைக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]