(UTV|COLOMBO)-அங்கமுவ நீர்த் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
அத்துடன் புத்தளம் – மன்னார் பழைய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலையால் நேற்றைய தினம் புத்தளம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் வௌ்ளநிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை புத்தளம் மாவட்டத்தின் சில கிராமங்களில் உள்ள சுமார் 250 வீடுகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டிருப்பதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.
நேற்று மாலை வீசிய கடும் காற்று காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மெல்லன்குளம், போகஹாயாய, கிவுல கட்டுவ மற்றும் ஹல்மில்லாவா போன்ற கிராமங்களுக்கு இவ்வாறு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]