சூடான செய்திகள் 1

தமிழ்த் தலைமைகளை பலப்படுத்த தவறாதீர்கள்….

(UTV|COLOMBO)-புதிய அரசியலமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், சம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தல் நலம் என தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் மோதல் தமது பிரச்சினை அல்ல.

தமது முன்னுரிமை பட்டியலில் முதலிடம் இனப்பிரச்சினை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு இல்லையென்றால், இனப்பிரச்சினைக்கு தீர்வில்லை.

இனப் பிரச்சினைக்குத் தீர்வில்லையென்றால், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவி சும்மா ஒரு பக்க வாத்தியம்தான் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், புதிய அரசியலமைப்பு பணிகளை ஆரம்பிக்க முடியாவிட்டால், சம்பந்தன் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தல் நலம்.

அதன் பின்னர் அது தொடர்ந்தால் அது பக்க வாத்திய ஊதல்தான்.

ஈழத்தை கைவிட்டு ஒரே நாட்டு கொள்கையை சம்பந்தன் ஏற்றது சிங்கள தேசத்துக்கு முக்கியமில்லை போலும் என அமைச்சர் மனோ கணேசன் தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், அமைச்சரவையில் மிதவாத சிறுபான்மையினர் தலைவர்களுக்கான தனித்த ஆதரவுக் குரல் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடமிருந்தே கிடைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தலைமைகளை பலப்படுத்த தவறாதீர்கள்.

அவர்களை பலவீனப்படுத்தாதீர்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியதாக மனோ கணேசன் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சுற்றிவளைப்பில் 1400 க்கும் அதிகமான சாரதிகள் கைது

ஜூம்மா தொழுகையை பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிப்பு

அமைச்சர் ரவியின் மகள் சீ.ஐ.டி முன்னிலையில்