(UTV|AMERICA)-அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), 43-வது அதிபராக பதவி வகித்தவர்.
பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பார்பரா புஷ் தனது 92வது வயதில் இன்று மரணமடைந்ததாக முன்னாள் அதிபர் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]