சூடான செய்திகள் 1

பாதிக்கப்பட்ட விவசாய சமூகத்திற்கு நிவாரணம்-ஜனாதிபதி

(UTV|COLOMBO)-புத்தளம் மாவட்டத்தில் இடம்பெறும் கடுமையான வறட்சி காரணமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்காக 600 ஏக்கர் சோளப் பயிர்ச்செய்கைத் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இரண்டு போகங்கள் எத்தகைய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிலும் ஈடுபடமுடியாத பிரதேசங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இங்கினிமிட்டிய திட்டத்திலுள்ள மிகவும் குறைந்த அளவில் உள்ள நீரைப் பயன்படுத்தி இந்த விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

 

இதற்கு மேலதிக பயிர்ச்செய்கைக்காக விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்க மேலதிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சூரிய சக்தியினால் நீர் பம்பிகளை இயக்கி நீரைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டம், களை எடுக்கும் இயந்திரங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித்திட்டம், இளம் விவசாய தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் ஆகியனவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

 

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் ஏற்பாடுகளை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்தி விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்கும் வகையில் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மேலும் 12 பேர் பூரண குணம்

கடந்த 25 நாட்களுக்குள் கொழும்பு மாவட்டத்தில் 2075 டெங்கு நோயாளர்கள் பதிவு

நீர்கொழும்பு அமைதியின்மையால் ஏற்பட்ட சொத்து சேதங்களுக்கு நட்டஈடு-பிரதமர் அறிவுறுத்தல்