சூடான செய்திகள் 1

இரண்டாக பிளந்த்தது மனோ கணேசனின் ஒருமித்த முற்போக்குக்கூட்டணி (காணொளி)

(UTV|COLOMBO)-அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஒருமித்த முற்போற்கு கூட்டணியில் இருந்து ஜனநாயக இளைஞர் இணையம் விலகிக்கொண்டுள்ளது.

கொழும்பு ஆமர் வீதியில் அமைந்துள்ள தனியார் உணவகமொன்றில்  நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இதற்கமைய , இளைஞர் இணையத்தின் அங்கம் வகிக்கும் 17 பேர் மனோ கணேசனின் அதிருப்தியான அரசியல் செயற்பாடுகளினால் அக்கட்சியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தனர்.

இதன்போது , ஒருமித்த முற்போக்கு கூட்டணியின் அங்கத்துவ கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் ஒரு பகுதியான ஜனநாயக இளைஞர் இணையம் அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகிக்கொள்வதற்கான காரணங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கு பதிலளித்த ,அதன் தலைவர் ஏ,சஜீவானந்தன் , மனோ கணேசன் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவராக மாத்திரம் செயற்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் , அதாவது 2011 ம் ஆண்டளவில் தாம் சுயமாக சென்று அவருடன் இணைந்துக்கொண்டோம்.

தமிழ் சமூகத்தில் மீதுள்ள அக்கறையும் , கல்வி நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் கருத்திற் கொண்டே நாம் அவருடன் இணைந்து செயற்பட ஆரம்பித்தோம்.

கொழும்பில் 17 பேரும் நாடளாவிய ரீதியில் , 250 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் கொண்டு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கு ஆத்மசக்தியின் ஊடாக பலமளித்தோம்.

எமது அனைத்து ஆதரவினையும் , அன்புடன் வரவேற்று ஆதரவுடன் ஏற்றுக்கொண்ட மனோ கணேசனை மாற்றியது அமைச்சுப் பதவியே.

அமைச்சராக பொறுப்பேற்ற தருணத்தில் இருந்து அவருக்கு வாக்களித்த மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் குப்பை தொட்டியில் எறியப்பட்டன.

மக்களிடத்திலே வாக்குகளை நிறைவேற்ற முடியாதவர்களாய் வெக்கித்தலைகுனிந்தோம்.

அரசியல் கைதிகளின் விடுதலை ,தமிழ் மக்களுக்கான உரிமை , தமிழ் மக்களுக்கான பிரதிநிதித்துவம் அனைத்திற்கும் நான் ஒருவனே என குரல் கொடுத்த மனோ கணேசன் , அமைச்சுப்பதவியினை பெற்றுக்கொண்டதன் பின்னர் சிங்களவர்கள் தன்னை இனவாதிகள் என கருதி அவர்களுக்கு அச்சம் கொண்டு தமிழ் மக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிராகரித்தார்.

அது மாத்திரமன்றி , ஜனநாயக ரீதியில் பயணிப்பதாக மார்தட்டிக்கொள்ளும் மனோ கணேசன் தேசிய சகவாழ்வு அமைச்சுக்கு நானே அமைச்சராவேன் .

நான் சிந்திப்பதே , இங்கு செயற்படுத்தப்பட வேண்டும் என்ற ஆணவ சிந்தனையோடு , ஜனநாயகத்தை மறந்து சர்வாதிகாரத்தில் ஆட்சி செய்தார் தனது கட்சியை,

நடை பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 27 ஆயிரம் வாக்குகள் தனது பெயருக்கு காணப்படும் நன்மதிப்பிற்காக கிடைக்கப்பெற்றது என வீதியில் இறங்கி போராடிய அனைத்து உறுப்பினர்களையும் , துச்சமென நினைத்து ஊடக அரசியலின் வாயிலாக தன்னை பிரபல்யப்படுத்திக்கொண்டுள்ளார்.

மேலும் , மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனோ கணேசன் கப்பம் பெறுகின்றாரா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

திடீரென , சினம் கொண்ட ஜனநாயக இளைஞர் இணைய உறுப்பினர்கள் ,சிறுபுன்னகையுடன் மனோ கணேசன் கப்பம் பெறுகின்றாரா இல்லையா என்பது தொடர்பில் எங்களுக்கு தெரியாது என குறிப்பிட்டதோடு நாங்கள் அவருடன் இணைந்தும் இனிமேலும் அரசியலில் ஈடுபட மாட்டோம் என்பதை தெரிவிப்பதற்காகவே வருகை தந்துள்ளோம் எனக் கூறி நகைச்சுவையாக தனது பதிலை வௌிக்கொணர்ந்தனர்.

அதுமாத்திரமின்றி , கட்சியின் உறுப்பினர்களை உதாசீனப்படுத்துவதும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்து பாராமுகமாக செயற்படுவதும் , காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்த ஏ,சஜீவானந்தன் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் ஒரு தீர்மானத்தினை எடுத்தாலும் தலைத்துவம் எடுக்கும் தீர்மானமே இறுதியானதாக அமையும் என கூறினார்.

இந்நிலையில் , குறித்த கட்சியின் தலைவர் மற்றும் தலைமைத்துவத்திற்கு இடையிலான வேறுபாடு என்னவென்று ஊடகங்கள் வினவின.

பதிலளித்த சஜீவானந்தன் அதற்கான விளக்கத்தை கூறி மனோ கணேசனுக்கு சேறு பூச நாங்கள் முன்வரவில்லை .

அனைவருக்கும் தெரிந்த விடயம் தானே என கூறினார்.

இதேவேளை , கட்சியில் இருந்து விலக தீர்மானித்ததை தொடர்ந்து வேறு கட்சிகளில் இணைவது தொடர்பில் தீர்மானித்துள்ளீர்களா என வினவப்பட்டது.

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய கட்சியுடன் விரைவில் இணையவிருப்பதாகவும் , அது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் அதன் தலைவர் ஏ,சஜீவானந்தன் தெரிவித்தார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ரவியின் வீட்டிற்கு

வேட்பாளராக சஜித்தை கட்சியின் தலைவர் என்ற ரீதியில் அங்கீகரிக்கிறேன் – ரணில்

அமைச்சரவையின் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று நியமனம்