விளையாட்டு

133 பதக்கங்களை பெற்று அவுஸ்ரேலியா முன்னிலையில்

(UTV|COLOMBO)-அவுஸ்ரேலியாவில் இடம்பெறும் 21ஆவது பொதுநலவாய விளையாட்டு நிகழ்வில் இதுவரையில் 133 பதக்கங்களை பெற்று அவுஸ்ரேலியா தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது.

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாண்ட் நகரில் 7ஆவது நாளாக நடைபெற்றுவரும் இப்போட்டியில் 52 தங்க பதக்கங்களையும், 38 வெள்ளிப் பதங்கங்களையும் , 43 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று அவுஸ்ரேலியா முன்னிலையில் உள்ளது.

லண்டன் 24 தங்கப்பதக்கங்களையும் 30 வெள்ளிப்பதக்கங்களையும் , 21 வெண்கலப்பதக்கங்களுடன் மொத்தமாக 75 பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்திலுள்ளது.

கனடா 8 தங்கப்பதங்கங்களையும், 21 வெள்ளிப்பதங்கங்களையும், 15 வெண்கலப்பதங்கங்களையும் பெற்றுள்ளது.

இந்தியா 12 தங்கப்பதக்கங்கள் 4 வெள்ளிப்பதக்கங்கள் 8 வெண்கலப்பதக்கங்கள் உள்ளடங்கலாக 24 பதக்கங்களை பெற்றுள்ளது.

இலங்கை 1 வெள்ளிப்பதக்கத்தினையும் 3 வெண்கலப்பதக்கங்கள் உள்ளடங்கலாக 4 பதக்கங்ககளைப் பெற்று இப்போட்டியில் 25 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இங்கிலாந்திடம் இந்தியா வீழ்ந்தது

உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து ஷிகார் தவான் விலகல்

சர்வதேச கிரிக்கட் தொடரை 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்த தீர்மானம்